>சித்தர் பாடல்களும் சிலை வணக்க எதிர்ப்பும்.

>

உருவ வழிபாட்டை எதிர்த்து சித்தர்கள் பாடிய பாடல்கள் ஏராளம் விக்கிரக வழிபாட்டை வெறுத்து இதோ சிவ வாக்கியர் பாடுகிறார்.
சிவ வாக்கியர்
(சிவவாக்கியர் யார், எவ்விடத்தை சார்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் விட்டு சென்ற பாடல்கள் பெயரால் சிவவாக்கியர் என்று பெயர் வந்ததாக கருதப்படுகிறது. தென்னாகத்தை சேர்ந்த சைவத் துறவிகளாகக் கருதப்படும் சித்தர்களுள் ஒருவராக கொள்ளப் படுகிறார். அவர் வாழ்ந்த காலம் தெரியவில்லை.)

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி ­ங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்து நீர் உம்மை நிர் அறிந்த பின்
அம்பலம் நிறைந்தர் ஆடல் பாடல் ஆகுமே!

ஓசை உள்ள கல்லை நீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாச­ல் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்­ல் பூவும் நீரும் சாத்துகிறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பஞ்சாத்தியே
சுற்றி வந்த மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

சிலை வணக்கத்தை எதிர்த்து இவ்வாறு பாடியவர் சிவ வாக்கியர்.
பத்திரகிரியார் புலம்பல்

உளியிட்ட கல்லு முருப் பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் போற் பொருளாவ தெக்காலம்
என்று பத்திரிக்கிரியார் சிலை வணக்கத்தை கண்டு சீறுகிறார்.
பட்டினத்துப் பிள்ளையார் பாடல்
சொல்­னுஞ் சொல்­ன் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்­னு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்து விட்டோர்
இல்­லு மன்பரிடத்திலு மிசனிருக்கு மிடங்
கல்­னுஞ் செம்பிலுமோ விருப்பானங்கள் கண்ணுதலே

பட்டினத்துப் பிள்ளையாரின் பாடலுக்கு தில்லை திருநகர் ஸ்ரீசாமிநாததேசி கேந்திர சிவ யோகியின் உரை இதோ :

நெற்றியில் கண் கொண்ட எங்கள் நிலமனார் மந்திரங்களிலும் அம்மந்திர முடியாகவும் சதுர் மறைகளாகிய சுருதியாதிகளிலும் அந்த காரத்தும் பரமாகாயத்தும் சிவதத்துவங்களை ஆராய்ந்து சிவத்தை தெளிந்து கலந்து வாழும் பரம நிஷ்டாபாராள் வீற்றிருக்கும் இல்லங்களிலும் அத்தகைய உத்தம அன்பர் கண்மாட்டும் எழுந்தருளியிருப்பதல்லாமல் கல் செம்பு இவைகளிலோ பொருந்தியிருப்பான் இரான் என்றபடி.

அதே பாடலுக்கு அ. மஹாதேவயோகி அவர்கள் நூதன முறையில் அமைத்தெழுதிய தத்துவார்த்த விளக்க உரை இதோ:
எங்களுடைய நெற்றிக் கண்ணினுடைய சுவாமி சிலையிலும் விக்கிரகத்திலுமாந்திரந்தானா எழுந்தருளியிருப்பான்? அங்ஙனமாற்று அவற்றில் மாத்திரமேயல்லாமல் பதத்தினும் பதாந்தமான மந்திரத்திலும் மந்திரமுற்றுமாலையாகக் கொண்ட வேத சுருதியென்னுஞ்கலையினும் இரவிலும் களங்கமில்லாத ஆகாயத்திலும் ஏது பொருளென ஆராய்ந்து ஜீவ கொடிகளையும் தத்துவங்களையும் பொருளல்லவன விடுத்த ஞானிகளின் இருப்பிடமான அருண் மாளிகையிலும் எவர்கள் அன்பர்களோ அவர்களிடத்திலும் எல்லா ஐசுவரியங்களையும் தம்மதாகவுடைய சிவ பெருமானின் இடங்களாகும். பட்டினத்தார் விக்கிரக வழிபாட்டை பழித்து பாடியிருப்பதை இதனால் அறியமுடிகிறது.
குதம்பைச் சித்தர்

கல்­னைச் செம்பினைக் கட்டையைக் கும்மிடல்
புல்லறிவாகு மேடிலி குதம்பாய்லி புல்லறிவாகுமேடி
மெய்த்தேவனொன்றென்று வேண்டாத பன்மதம்
பொய் தேவைய்ப் போற்று மேடி குதம்பாய்
பொய்த் தேவைப் போற்றும்

என்று கற்சிலைகளின் வணக்கத்தைக் கண்டித்து குதம்பைச் சித்தர் பாடியுள்ளார்.

சங்கராச்சாரியாரின் உடலறி விளக்கம்
வட்ட மதியிரவிதனைப் பூசிப்போரும்
மண்ணி ­ங்கம்தனை எடுத்து பூசிப்போரும்
சுட்டவுரு மரச்சிலைகள் பூசிப்போரும்
துய்ய செம்புக் கல்லுருவை பூசிப்போரும்
திட்டமுட னெட்டெழுத்துப் பொருளென் போரும்
சிறந்தவெழுத்தஞ்சுமே பொருளென் போரும்
விட்ட விடந் தனையரியாரிவர் தாமெல்லாம்
விஷ்ணுவென்றும் சிவனென்றும் விளம்புவாரே

என்று சங்கராச்சாரியாரின் உடலறி விளக்கம் 97ம் பாட­ன் சிலை வணக்காரர்களை சாடியுள்ளார்.

ஞான மதியுள்ளான்
கல்லைப் பிளந்து சிறுசிலையாக்கிக் கண்ணாளர் செய்ததை கண்டுமிருந்து
எல்லைப் பிடாரியிது சிவ­ங்கமென் றேற்றிப்
பணியுடும்பலைலோ பேயன் நானோடா பேயன்
என்று முத்தானந்த சுவாமிகள் தமது ஞான மதியுள்ளான் 25ம் தருவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அகஸ்தியர் ஞானம்

அண்டராண்டம் கடந்து நின்ற சோதி தானு
மவனிதனிலுடைந்த கல்­லமருமோ சொல்
எண்டிசையு மெவ்வுயிரு மான சோதி
இனமரங் கல்லு களியிருப் பாரோதான்
என்று அகஸ்தியர் ஞானம் 56வது பாடல் அறுவிக்கிறது.
பண்ணென் உனக்கான பூசையொரு வடிவிலே
தீர்த்த­ங்க மூர்த்தியென்று தேடியோடும் தீயரே

என்று இந்துமத சித்தர்களே விக்கிரக வழிபாட்டை பாடியுள்ளனர்

Leave a comment